செய்திகள்

மொட்டை சிவா கெட்ட சிவா புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படம் மொட்டை சிவா கெட்ட சிவா. இப்படம் வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவு பிரச்சனையால் பல மாதங்கள் வெளிவரமுடியாமல் இருந்தது.

கடைசியாக கடந்த மாதம் 17 ம் தேதி வெளிவரும் என்று நிலையில் மதனிடம் பைனான்ஸ் கொடுத்திருந்த போத்ரா என்பவர், தான் கொடுத்த பணம் திரும்பி வரவில்லை என்பதால் இந்த படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அதனால் 17 தேதியும் வெளிவரமுடியாமால் போனது . இந்நிலையில் இன்று போத்ரா கொடுத்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பை வழங்கினார். அதன் பின் இன்று இந்த படம் இம்மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்று அப்படக்குழு அறிவித்துள்ளது.

N5