செய்திகள்

மோட்டார்ச் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயம்

தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார்ச் சைக்கிளும், துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மல்லாகம் சந்தைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்துச் சம்பவத்தில் விஜயகுமார் நிதர்சன்(வயது-36) தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் திஸநாயக்க ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவார்.

படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தெல்லிப்பழைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.