செய்திகள்

நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானாவிற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் கலந்து கொள்கிறார்.

ரஜினி சினிமாவிற்கு வந்து 41 ஆண்டுகள் ஆகிய நிலையில், அவர் கடந்து வந்த பாதையை பற்றி, ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்கிறார்களாம்.

ரஜினி ரசிகர்களின் கருத்துக்களை நேரில் கேட்ட பின், தான் சந்தித்த வெற்றி, தோல்விகள் குறித்து அவரும் பேசியிருக்கிறாராம்.

இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றள்ளது.

N5