செய்திகள்

யானைகளை கட்டுப்படுத்த தற்காலிக தீர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் யானைகளை கட்டுப்படுத்த தற்காலிக தீர்வு ஒன்று எட்டப்பட்டிருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புத்துவெட்டுவான் ஐயன்கன்குளம், மருதன்குளம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து காட்டுயானைதொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் குறித்த பகுதியில் தாங்கள் குடியிருக்க முடியாத நிலைய காணப்படுவதுடன் கடன்களை பெற்று விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போது அவற்றைக் கூட பாதுகாக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தற்போது யானைகளின் தொல்லைகளைக்; கட்டுப்படுத்த தற்காலிக தீர்வு ஒன்று எட்டப்பட்டுள்ளது.
அதாவது காட்டுயானைகளின் தொல்லைகளை கட்டுப்படுத்;த யானை வெடிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யானைப்பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு வனவிலங்|கு அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கு தேவையான உபகரணங்;களையும் பெற்றுக்கொள்வதற்கு கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
n10