செய்திகள்
யார் வீட்டு அம்மிக்கல்லில் …. யார் அரைப்பது மிளகுவைத்து?
ஏர்காலில் மாடுபூட்டி என் அப்பன்
ஓடாய் இளைத்து உழைத்தது…
சீரென்று கொடுத்த நிலம்காண
நெடுந்தூரம் கடந்து ஓடோடி வந்தேன் – ஐயோ !
பேரெழுதி வைத்துவிட்டார் அங்கே
என் காணிய தன்பூமியென்று …
போர் ஓய்ந்த பின்னரும் எம்மண்ணில்
போய்ச் சேராத காடேறிப் பேய்கள் !
ஊரார் சொத்துக்கு தன்பேரில் உறுதியை
உடையார் எழுதி வைத்ததைப்போல்
யார் வீட்டு அம்மிக்கல்லில் ….
யார் அரைப்பது மிளகுவைத்து என்று ;
ஊர் அழுகுது மாரடித்து….
சோர்ந்து போனேன் நான் துடித்து !!
தீர்வுதரும்வரை நீரருந்தேன் –என்
சாவுவரினும் என்னிலத்தை காவுகொடேன்!!!
-கொற்றவை



