செய்திகள்

யாழில் அதிகாலை இடம்பெற்ற கொடூர வாள் வெட்டுத்தாக்குதல்

யாழ்ப்பாணம் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த தாயும் மகளும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியில் இளைஞரொருவர் வீடுபுகுந்து தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்ற 37 வயதான இளைஞன் அப்பகுதியில் உள்ள காணியொன்றில் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்திற்கும் காதல் விவகாரமே காரணம் எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

-(3)