செய்திகள்

யாழில் பொதுமக்களிடம் காணி கையளிப்பு!

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 70 ஏக்கர் காணி நிலங்களும், கிளிநொச்சி மாவடத்தில் சுமார் 40 ஏக்கர் காணி நிலங்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு தரப்பினரால் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கா மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பதில் அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது.

-(3)