செய்திகள்

யாழில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனுக்கு விளக்கமறியலில்

பாடசாலை செல்லும் பதின்ம வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.அச்சுவேலியில் பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து குறித்த சிறுமியை அழைத்து சென்ற இளைஞன் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார்.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த விடயம் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கல்வியங்காடு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டு, பிரான்ஸில் வசித்து வந்த 20 வயது இளைஞனுக்கும், அச்சுவேலியை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது.(15)