செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கான ரயில் போக்குவரத்து 5 மாதங்களுக்கு நிறுத்தம்!

மஹவ தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான ரயில் போக்குவரத்தை 5 மாதங்களுக்கு இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் இது தொடர்பில் அறிவித்தார்.

இதன்படி 2023 ஜனவரி 15ஆம் திகதி முதல் குறித்த மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து இடைநிறுத்தப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

ரயில் பாதையில் புனரமைப்பு பணி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

-(3)