செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சித்தார்த்தன் போட்டியிடுவார்: புளொட் கூட்டத்தில் இறுதி முடிவு

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பொதுச்சபைக் கூட்டம் வவுனியா கோவில்குளம் அறிவொளி இல்லத்தில் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சமகால அரசியல் நிலைமைகள், கட்சியினுடைய செயற்பாடுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மற்றும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் என்பவை தொடர்பாக ஆழமாக கலந்துரையாடப்பட்டது.

இறுதியாக யாழ் மாவட்டத்திற்கு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களையும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சதாசிவம் வியாளேந்திரன் (அமல் மாஸ்டர்) அவர்களையும் வேட்பாளராக நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டதுடன், நடந்த கலந்துரையாடல்களையும், வேட்பாளர்களின் தகுதிகளையும் ஆராய்ந்து மற்றைய மூன்று மாவட்டங்களுக்குமான வேட்பாளர்களை நியமிப்பதற்கு தலைவருக்கும் செயலாளருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.

கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களை வன்னி மாவட்ட வேட்பாளராக நியமிப்பது என்று முடிவெடுத்துள்ளதாக கட்சியின் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்தார்.