யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவரை கடத்த முயன்றதாக சந்தேகத்தில் நபர் ஒருவர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு , யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.மக்களால் ஒப்படைக்கப்பட்ட குறித்த நபர் பொலிஸாரினால் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த சம்பவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
இன்று காலை யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்மானியா கல்லூரி வீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில் பாடசாலை சென்ற மாணவி ஒருவரை குறித்த நபர் நீண்ட நேரமாக அவதானித்துக் கொண்டிருந்துள்ளார்.இதேவேளை அப்பகுதி மக்கள் குறித்த நபரை பிடித்து விசாரித்த போது அவரது பதில் சந்தேகத்துக்கிடமாக இருந்ததினால் அவரை மடக்கி பிடித்து, அவரை நன்றாக நையப் புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.




