யாழ்ப்பாணத்தில் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்தியோரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையோரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.இதேவேளை இந்தச் சம்பவத்துடன் பொலிஸாருக்கு தொடர்புள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்டர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.இந்த காணொளி தொடர்பில் வடமாகாண மூத்த பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.(15)




