செய்திகள்

யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாகப் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறையிலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலைக்கு வந்த ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும், சாரதிக்குக் குளிர்பானத்துக்குள் மயக்க மருந்து கொடுத்துள்ளனர்.இதில் அவர் மயக்கமடைந்ததையடுத்து, அவரிடமிருந்த பணம் மற்றும் நகை என்பனவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.அதே நாளில் கீரிமலையிலிருந்து பருத்தித்துறைக்கு வாடகைக்கு அமர்த்திய மற்றொரு முச்சக்கரவண்டி சாரதியிடமும் இதே பாணியில் அவர்கள் திருடியுள்ளனர்.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் பயணிகள் போலப் பாசாங்கு செய்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாகப் பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நநேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.