யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி, இந்த போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்ததாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கோண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஆறுகால் மடப்பகுதியை சேர்ந்த இளைஞரே இவ்வாறு யாழ். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.(15)




