செய்திகள்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று 40 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று திங்கட்கிழமை 40 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.கஞ்சாவை கடத்தி வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரையும் கைது செய்துள்ள கடற்படையினர் கஞ்சாவையும் குறித்த இளைஞனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இந்தியாவில் இருந்து படகு ஒன்றில் குருநகர் கடற்கரை பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்பட்ட நிலையில், கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின் மூலம் கஞ்சா மீட்கப்பட்டது.(15)