செய்திகள்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பம்
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இன்று திங்கட்கிழமை காலை 10.50 அளவில் சென்னையில் இருந்து புறப்படும் விமானம் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்.
இதனையடுத்து மீண்டும் எலையன்ஸ் ஏர் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும்.அத்துடன் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.(15)




