செய்திகள்

யாழ்ப்பாணம் – சென்னை இடையே விமான சேவைகள் மீள ஆரம்பமானது!

யாழ்ப்பாணம் பலாலி சர்தேச விமான நிலையத்தின் சேவைகள் இன்று காலை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று முற்பகல் 10.50 மணியளவில் சென்னையில் இருந்து முதலாவது விமானம் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதனையடுத்து மீண்டும் எலையன்ஸ் ஏர் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

இதன்படி இன்று முதல் பலாலி – சென்னை இடையே வாரந்தோறும் நான்கு விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

-(3)