செய்திகள்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக போராட்டம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது.குறித்த யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பித்த போராட்டம், அங்கிருந்து வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு பேரணியாக சென்று நிறைவடைந்தது.(15)