யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு
இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் இடம்பெற்றது. யாழ் இந்தியத் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ்ஜெயபாஸ்கரனினால் இந்திய நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.இந்திய குடியரசு தலைவரின் சிறப்புரையும் யாழ் இந்திய துணை தூதுவரால் வாசிக்கப்பட்டதோடு இந்திய காவல் படையினரால் நாட்டுப்பண்ணும் இசைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணை தூதுவராலய அலுவலகத்தில் இந்தியாவின் காவல்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையோடு குடியரசு தின நிகழ்வுகள் ஆரம்பமாகின. குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணை தூதரக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.(15)






