செய்திகள்

யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரிக்கு புதிய பணிப்பாளராக முகுந்தன் நியமனம்

யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் புதிய பணிப்பாளராக முகுந்தன்  இன்று முதல் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் அதிபராக கடமையாற்றி வந்துள்ளார்.

வாழ்க்கை திறன் மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர்  மகிந்த சமரசிங்கவும் மற்றும் அமைச்சின் உயரதிகாரிகளும் நாளை வெள்ளிக்கிழமை யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு நேரடியாக விஜயம் செய்ய இருக்கின்றனர்.

யாழ். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி சீராக இயங்க ஒத்துழைத்த முதலமைச்சர் வடமாகாணம், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உண்மை நிலையை வெளிக்கொண்டு வர பாடுபட்ட இணைய மற்றும் பத்திரிகை செய்தி நிறுவனங்களுக்கும் தமது நன்றிகளை தொழில்நுட்பவியல் கல்லூரி சமூகம் தெரிவித்துக் கொண்டுள்ளது.

n10