யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் தனி பல்கலைக்கழகமாக மாற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றித் தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.குறித்த வளாகம் புலிகளின் பயன்பாட்டில் இருந்த நிலையில் இராணுவம் கிளிநொச்சியை விடுவித்த பின்னர் தமது முகாமாக மாற்றிக்கொண்டனர்.
அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கதைத்து அதனை பல்கலைக்கழகத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளோம்.அங்கு நான்கைந்து வளாகங்கள் வந்துள்ளது. கிளிநொச்சி வளாகத்தை கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாற்றித் தருவோம் என கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலான வடயங்கள் பற்றி பேசும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.(15)




