யாழ். கச்சேரி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் தங்க நகைகளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணம், கச்சேரி பகுதியில் வைத்து 8 அரை கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 20 இலச்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவரை இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் இவர் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளவர் எனவும் தெரியவந்துள்ளது.வியாபாரத்துக்காக ஹரோயின் போதைபொருளை எடுத்துக் கொண்டு வீதியில் நடந்து சென்ற இளைஞனை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 8 அரை கிராம் ஹெரோயின் போதை பொருள் மற்றும் 20 இலச்சம் ரூபா கொண்ட தங்க ஆபரணங்களான 6 காப்புக்கள் 4 சங்கிலிகள், தோடுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.(15)




