யாழ் சென்ற மங்கள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்துக்கும் சென்றார்
நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான இணையத்தள அறிமுகமும் சிவில் சமூக பிரதிநிதிகளின் சந்திப்பும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு இன்று யாழ்ப்பாணம் சென்ற வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர யாழ் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்துக்கும் விஜயம் விஜயம் செய்தார்.
இந்த நட்பு ரீதியான சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், ஈ. சரவணபவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




