யாழ்.நகரில் விபத்து இளைஞர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளும் கனரக வாகனமொன்றும் மோதிக்கொண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு, கனரக வாகன சாரதி கைதான சம்பவம் இன்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, முட்டாஸ் கடை சந்திக்கு அருகாமையில் நடந்த இவ்விபத்து தொடர்பில் தெரியவருவதாவது:
மீசாலையைச் சேர்ந்த இராஐரட்ணம் அபிதாஸ் என்கிற 29 வயதானவரே இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தபோது லொறியுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(15)




