செய்திகள்

யாழ் நகர்- லண்டன் கிங்ஸ்ரன் இடையே இரட்டை நகர் உடன்படிக்கை கைச்சாத்து (படங்கள் )

யாழ்ப்பாண நகரத்துக்கும் லண்டன் கிங்ஸ்ரன் நகரத்துக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் மிக்க இரட்டை நகர உடன்படிக்கை நேற்று மாலை செவ்வாய்க்கிழமை கிங்ஸ்ரன் நகரசபை அவையில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் வட மாகாண சபை முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் மற்றும் கிங்ஸ்ரன் மாநகர சபை முதல்வர் கெவின் டேவிஸ் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

நகரசபை அவையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் அமாரி விஜயவர்தன, கிங்ஸ்ரன் நகர சபை கவுன்சிலர்கள் உட்பட நகரசபையின் அழைப்பிதழ் அடிப்படையில் பெரும் எண்ணிக்கையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல்வேறு நன்மைகளை யாழ்ப்பாண நகரம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் வட மாகாண சபை செய்துள்ள முதலாவது சர்வதேச உடன்படிக்கை இது என்றும் இந்த நிகழ்வில் இரையாற்றிய பிரமுகர்கள் புகழாரம் செய்த்தனர்.

இந்த நிகழ்வில் முதன்மை உரை ஆற்றிய வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன், பல்வேறு துறைகளில் இந்த உடன்படிக்கையின் கீழ் செயற்த்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டதுடன் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புலம்பெயர் தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை செய்வர் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, இரு இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் தொடர்ந்தும் வடமாகாணத்தை ஆக்கிரமித்து நிற்பதாக கண்டனத்தை வெளியிட்ட முதலமைச்சர் பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான நிலத்தை அவர்கள் அபகரித்துள்ளதுடன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் பெரும் குந்தகம் விளைவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

twinning programme Jaffna Kingston (3) twinning programme Jaffna Kingston (4) twinning programme Jaffna Kingston (5) twinning programme Jaffna Kingston (8) twinning programme Jaffna Kingston (10) twinning programme Jaffna Kingston (11) twinning programme Jaffna Kingston (12) twinning programme Jaffna Kingston (13) twinning programme Jaffna Kingston (15)