செய்திகள்

யாழ். நயினாதீவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.நயினாதீவு 8ம் வட்டாரத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தாயாரான முகமது றிலா சபானா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.(15)