செய்திகள்

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்குதல்; 3 சந்தேகநபர்களுக்கு பிடியாணை

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் மூன்று சந்தேகநபர்களுக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கே யாழ். நீதவான் சின்னதுறை சதீஸ்தரன் இன்று (15) இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய 72 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

எனினும் 65,66 மற்றும் 67 ஆம் இலக்க சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை.

n10