செய்திகள்

யாழ் பருத்தித்துறையில் தமிழ் வாரஇதழ் தீயிட்டு எரிப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் தமிழ் வாரஇதழின் முகப்பு பக்கத்தில் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் வே.பிரபாகரன் நடந்து வரும் படம் பிரசுரிக்கப்பட்டிருந்த அதேவேளை, “ இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் “ என்ற தலைப்பும் இ்டப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த செய்திக்கு இடப்பட்ட தலைப்பு , மற்றும் படம் என்பன வேண்டும் என்றே போடப்பட்டது என தெரிவித்தே பருத்தித்துறை பகுதிகளில் பத்திரிக்கையின் பிரதியை தீயிட்டு கொளுத்தி தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுளார்கள்.

குறித்த செய்தி தலைப்புடன் தொடர்புடைய செய்தியானது இந்தியாவை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான சங்கர் என்பவரது கதையாகும். தொடர் கொலைகளை செய்த கொலையாளியின் மரண வாக்கு மூலம் என செய்தி வெளியாகியுள்ளது.இதனால் பொருத்தமற்ற வகையில் படம் மற்றும் தலைப்பிட்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமதிப்புக்குட்படுத்தும் வகையில், வெளியான தமிழ் வாரஇதழ் பருத்தித்துறை இளைஞர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது.