யாழ். பல்கலைக்கழகத்தில் ஆறுமுக நாவலர், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் உருவச் சிலைகள் திறப்பும் இன்று திரைநீக்கம்
யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேகமும், சமயத் தலைவர்களான ஆறுமுக நாவலர், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் உருவச் சிலைகள் திறப்பும் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.தொடர்ந்து பரமேஸ்வராக் கல்லூரி இயக்குநர் சபையின் அனுசரனையுடன் நடாத்தப்படவுள்ள வேதாகமப் பாடசாலையும்ம் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஆறுமுக நாவலரின் உருவச் சிலையை சிவஶ்ரீ கெங்காதரக் குருக்கள் திரைநீக்கம் செய்து, தீபாராதனை காட்டித் திறந்து வைக்க யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.(15)




