செய்திகள்
யாழ். பல்கலைக்கழகத்தில் ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல்
ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சின், பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இன்று திங்கட்கிழமை உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு அகவணக்கம் செலுத்தி ஈகைசுடரேற்றப்ட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.(15)




