செய்திகள்
யாழ் பல்கலையில் நிர்வாக முடக்க போராட்டம்
மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ் பலைக்கழக மாணவர்கள் நிர்வாக முடக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை முதல் அவர்கள் பல்கலைக்கழகத்தில் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சற்று முன்னர் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் சங்கங்களை மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் சுவாமிநாதன் சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)





