செய்திகள்
யாழ் பல்கலை மாணவர்கள் உயிரிழப்பு விவகாரம் : சுயாதீன விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகளை நடத்தி அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈட்டை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. -(3)




