செய்திகள்

யாழ்.பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் காட்டுமாறு வேண்டுகோள்

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் கட்டி பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.சுமார் 60 வயது மிக்க கருப்பு நிறமுடைய பெண் மஞ்சள் நிற சட்டையும் நீல நிற பாவாடையும் பச்சை மற்றும் வெள்ளை நிறமுடைய சேலையும் அணிந்த்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.யாழ் பேருந்து நிலையத்தில் நேற்று (29) சனிக்கிழமை பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தமை குறிபிடத்தக்கது.(15)