செய்திகள்

யாழ்.மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்த மியன்மார் அகதிகள் யாழ். சிறைச்சாலையில் ஒப்படைப்பு

யாழ்.மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் யாழ். சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோதே நடுக்கடலில் படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்.

இந்நிலையில் சட்ட விரோதமாக சென்றவர்கள் டிசம்பர் 17ம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.இவர்கள் நேற்று திங்கட்கிழமை காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில் யாழ். சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.(15)