யாழ் .மாவட்டத்தில் நவீனமுறையில் உருளைக்கிழங்கு உற்பத்தியினை மேற்கொள்வதற்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு
யாழ் .மாவட்டத்தில் நவீனமுறையில் உருளைக்கிழங்கு உற்பத்தியினை மேற்கொள்வதற்கு உள்ளீடுகள், உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் வடமாகாண பிரதமசெயலாளர் எஸ்.எம்.சமன்பந்துலசேன, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எ.சிவபாலசுந்தரம், வடமாகாண விவசாய நவீனமயமாக்கல் செயல்திட்ட பணிப்பாளர் வி.விஜிதன், விவசாய போதனாசிரியர்கள், ISP நிறுவன உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் சுமார் 190 விவசாயிகள் கலந்து கொண்டிருந்ததோடு சுமர் 190 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.வடமாகாண விவசாய நவீனமயமாக்கல் செயல்திட்டப் பணிப்பாளரின் தலைமையில் யாழ் மாவட்ட நவீன விவசாய உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கமும் இணைந்து இதனை வழங்கி வைத்ததுள்ளன.(15)




