யாழ் மாவட்டத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பு
யாழ் மாவட்டத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் தரவுகளில் இருந்து தெரியவருகிறது.2022ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 9 சம்பவங்களும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் 15 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.இதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் உள்ள சுன்னாகம் பிரிவில் அதிகமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
2020 ஆம் ஆண்டு பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்த ஆண்டு அதை மூன்றாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.யாழ்.மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் 38 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.அவற்றுள் காங்கேசன்துறை பிராந்தியத்தில் 10 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதிகமான சம்பவங்கள் அச்சுவேலி போலீசை பிரிவில் இடம் பெற்றுள்ளன என யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.(15)




