செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்கத் தகுதி: அரச அதிபர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 5 இலட்சத்து 239 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள 8 ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு காங்கேசன் துறைத் தேர்தல் தொகுதியில் 63 ஆயிரத்து 217 பேரும்,கோப்பாய்த் தொகுதியில் 55 ஆயிரத்து 891 பேரும்,மானிப்பாய்த் தொகுதியில் 54 ஆயிரத்து 567 பேரும்,சாவகச்சேரித் தொகுதியில் 51 ஆயிரத்து 702 பேரும்,வட்டுக்கோட்டைத் தொகுதியில் 47 ஆயிரத்து 621 பேரும்,நல்லூர்த் தொகுதியில் 46 ஆயிரத்து 699 பேரும்,உடுப்பிட்டித் தொகுதியில் 39 ஆயிரத்து 204 பேரும்,பருத்தித் துறையில் 36 ஆயிரத்து 138 பேரும்,யாழ்ப்பாணம் தொகுதிpயில் 33 ஆயிரத்து 50 பேரும்,ஊர்காவற்துறைத் தொகுதியில் 22 ஆயிரத்து 57 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.