யாழ்.மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து மாவட்ட செயலகத்தில், எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை தொழிற்சந்தையை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது என மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.குறித்த தொழிற்சந்தையில் தனியார் உற்பத்தி நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் துறை, ஹோட்டல் துறை, கணக்கியல் துறை, காப்புறுதித்துறை, ஆடை தொழிற்சாலைகள், பாதுகாப்பு சேவை, தாதியர் சேவை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கி சுமார் 40ற்கும் மேற்பட்ட தொழிற்துறை நிறுவனங்களும், பயிற்சி நெறி நிறுவனங்களும் பங்கேற்றவுள்ளனர்.
யாழ்.மாவட்ட மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தில் சுமார் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளையோர் தொழில் தேடுபவர்களாக பதிவு செய்துள்ளனர்.அவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கும் அத்துடன் தொழிற்சந்தைக்குரிய தங்களுடைய கற்கை நெறிகளை பயில ஆர்வம் உள்ளவர்க்கு அந்த பயிற்சி நெறியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த தொழில் சந்தை நிகழ்வு நடைபெறுகிறது என மாவட்ட செயலர் க. மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.(15)




