செய்திகள்

யாழ்.வடமராட்சியில் மன நலம் குன்றிய மூதாட்டியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர் தலைமறைவு

மன நலம் குன்றிய 66 வயதான மூதாட்டியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 40 வயதான நபர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய நபர், சம்பவம் நடந்து 10 நாட்கள் கடந்த நிலையில் தலைமறைவாகி உள்ளார் எனவும் அவரை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.அத்துடன் குறித்த நபர் கொலை மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 09ஆம் திகதி பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வீட்டிற்கு முன்பாக சென்ற நபர் , வாகன ஹார்னை அடித்து மூதாட்டியை அழைத்துள்ளார். மூதாட்டி வெளியே வந்ததும் அவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.சத்தம் கேட்டு வெளியே வந்த மூதாட்டியின், சகோதரியான 70 வயதான மூதாட்டியையும் அடித்து காயமேற்படுத்தி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.குறித்த சம்பவத்தில் பாதிப்படைந்த இரு மூதாட்டிகளும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர்.(15)