செய்திகள்

யுத்தக் களம் போல் காட்சியளிக்கும் கொஸ்கம (படங்கள்)

சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தின் போது வெடித்துச் சிதறிய குண்டுகளால் அந்த முகாமுக்கு அருகிலுள்ள வீடுகளுக்கும் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இதனால் அந்தப்பகுதி யுத்தமொன்று நடைபெற்ற பகுதி போல் காட்சியளிக்கின்றது.

அந்தப் பகுதியிலுள்ள சகல வீடுகளும் ஏதோவொரு வகையில் பாதிப்படைந்துள்ளன. அத்துடன் அந்த முகாமுக்கு முன்னாலிருந்த கடைத் தொகுதிகள் முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதேவேளை முகாமின் சகல கட்டிடங்களும் முழுமையாக சேதமடைந்துள்ளதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இந்நிலையில் அந்தப்பகுதியில் சிதறிக்கிடக்கும் வெடிபொருட்களை சேகரிக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதுடன் வீதியிலிருந்து பார்க்க தெரியாதப்படி சேதமடைந்த முகாம் தகர வேலியால் மறைக்கப்பட்டுள்ளது.

02 03 04 05 06 07

01
R-06