செய்திகள்

யுத்தத்தால் பாதிப்படைந்த பாலிநகர் முல்லைத்தீவில் தூக்கணாங்குருவியின் வாழ்வியல்!

தூக்கணாங்குருவி
රුක් වඩුකුරුල්ලා
Baya Weaver at Palinagar, Mullaithivu, Sri Lanka

தங்கள் உள்ளுணர்வின் உந்துதலால் சிறப்பான கூடுகளைக் கட்டும் பறவைகளுள் தூக்கணாங்குருவி முக்கியமான ஒன்று. பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பின்னும் தொங்கு கூடுகள் வியப்பை அளிப்பன.

இது ஊர்க்குருவி வமிசத்தைச் சேர்ந்த ஒரு பறவை. அளவிலும் உடலமைப்பிலும் இது ஊர்க்குருவியை ஒத்திருக்கும். ஆனால் இதன் மேல் தலை, மார்பு ஆகியன மஞ்சளாக இருக்கும். வயல்வெளி போன்ற இடங்களில் இது திரள்களாகக் கூடி வாழும். முட்டையிடும் காலங்களில் இது மஞ்சள், கருப்பு நிறங்களைப் பெற்றிருக்கும். கூடு கட்டிக் குஞ்சு பொரிக்காதபோது நீர் ஆதாரங்களுள்ள அடைவிடங்களில் கூடி இவை இரவைக் கழிக்கும்.

கோடையில் ஓர் கிணற்றருகில் அல்லது குளக்கரையிலுள்ள ஈச்சமரம் ,கருவேலமரம், இலந்தை மரம், பனை மரம் மற்றும் மின் கம்பிகளிலும் இவை கூடு கட்டும். கூடுகள் நார்களால் பின்னிய தடிப்பக்கங்களுடன் சுரைக்காய் போன்ற வடிவம் கொண்டிருக்கும். கிளைகளிலிருந்து தொங்கும் இக்கூடுகளில் வளைகளுள் தளங்கட்டி அதில் முட்டையிடும். இத்தளங்களின் பக்கங்களில் இக்குருவி களிமண் கட்டிகளை அப்பி அதில் மின்மினி பூச்சியினை ஒட்டி வைத்து கூட்டினை அழகு படுத்தும்.

N5

நன்றி:
நளின தேசம்- வைகுந்தன்