யுத்தத்தில் இடம்பெயர்ந்தவரின் வாக்குரிமையை பாதுகாக்கும் சட்டம்
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது வாக்குகளை அளிக்கும் உரிமையினை பாதுகாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட விசேட ஏற்பாடுகள் சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு 27ம் இலக்க வாக்காளர்களைப் பதிவு செய்யும் விசேட ஏற்பாடுகள் சட்டத்தினை செயற்படுத்தும் காலப்பகுதி 2015ம் ஆண்டு ஜுன் மாதம் 19ம் திகதியுடன் நிறைவடைந்தது. இது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுக்கமைய இந்த பதிவுகளை மேற்கொள்வதற்கு மேலும் கால அவகாசம் தேவை என இனங்கண்டுள்ளது.
இதனால் குறித்த சட்டத்தினை அமுல்படுத்தப்படும் காலத்தை மேலும் 04 வருடங்களினால் அதிகரிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச வாக்காளர்களைப் பதிவு செய்யும் விசேட ஏற்பாடுகள் சட்டத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதனைத்n தாடர்ந்து பாராளுமன்ற அனுமதியை பெறுவதற்காக இக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். -(3)




