செய்திகள்

”யுத்தத்தை முடிக்க நானே காரணம் மகிந்த அல்ல” : சந்திரிகா குமாரதுங்க

தான் இல்லாவிட்டால் மகிந்தவால் யுத்தத்தை வெற்றிக்கண்டிருக்க முடியாது எனவும் தான் கொண்டு வந்த ஆயுதங்கள் மூலமே அவர் யுத்தத்தை முடித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தனகல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘யுத்தத்தை முடித்தவர் கடந்த அரசாங்கத்தின் பிரதானியே எனவும் அவருக்கு மீண்டும் நாட்டை கொடுக்க வேண்டுமெனவும் சிலர் கூறுகின்றனர். அவர் யுத்தத்தை முடிப்பதற்கு முன்னர் நான் 75 வீத யுத்தத்தை முடித்துவிட்டேன் மிகுதி 25வீத யுத்தத்தையே அவர் செய்துள்ளார். அத்துடன் நான் கொண்டு வந்த ஆயுதங்கள் இருந்திருக்காவிட்டால் இவர்களால் யுத்தத்தை செய்திருக்க முடியாது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வெளிநாட்டிலிருந்து 6 தாக்குதல் விமானங்களை கொண்டு வந்தார் அவை அனைத்தும் நொறுங்கிவிட்டன. இப்படித்தான் அவர்கள் யுத்தம் செய்தார்கள். இறுதியில் நாட்டை நாசமாக்கினார்கள். இந்நிலையில் நாட்டை கட்டியெழுப்ப ஐ.தே.கவுடன் கைகோர்தத்தில் தவறில்லை”. என அவர் தெரிவித்துள்ளார்.      -(3)