செய்திகள்

யுத்தம் அவர்கள் தலைவிதியை மாற்றிவிட்டது

 பிபிசி யில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்

சிரியாவின் இரு சிறுவர்கள் இந்த வாரம் அந்த நாடு எதிர்கொண்டுள்ள யுத்தம் எவ்வளவு அர்த்தமற்றது என்பதை உணரவைத்தனர்.

முதலாவது எட்டுவயதான ஹனிஜடிட், அலெப்போ பல்கலைகழக மருத்துவமனைக்கு வெளியே அவன் ஸ்டிரெச்சரில் காணப்பட்டான்

மிகவும் வெப்பமான அந்த நாளில் அவன்  மாத்திரம்அணிந்திருந்தான். அவனது வலது கைதுண்டிக்கப்பட்டிருந்தது, அவனது துண்டிக்கப்பட்ட கையிலும், இரு கால்களிலும் பான்டேஜ்களை காணமுடிந்தது.

இதில் கொடுமையென்னவென்றால் அவன் தற்போது கைகளை இழந்த நிலையில் புதுவாழ்விற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றான் என்பதே, அவன் தனது வயதையொத்த நான்கு உறவினர்கள் இல்லாமலே இனி வாழவேண்டியிருக்கும், அவனது கை துண்டிக்கப்படுவதற்கு காரணமாகயிருந்த அந்த எறிகணை வீச்சில் அவர்கள் நால்வரும் கொல்லப்பட்டனர்.

ஏறிகணையால் தாக்கப்பட்ட பின்னர் வலியால் துடித்துக்கொண்டிருந்த அவன் தந்தையை அழைத்தான், ஆனால் அவர் அங்கிருக்கவில்லை,அங்கிருந்தவர்கள் அவனை தூக்கி டக்சியில்வைத்துக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.

அவன் சிரியாவில் கடந்தவாரம் யுத்தநிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் காயமடைந்திருந்தான்,அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது, அலப்போவிலிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் அது காணப்பட்டது.

அதே மருத்துவமனையில் முதுகில் காயங்களுடன் காணப்பட்ட இன்னொரு சிறுமி ரவ்டா அலயூசுவ்- வய ஏழு  அவள் முதுகில் சுடப்பட்டாள் என அவளது தாயார் தெரிவித்தார். அந்த துப்பாக்கிரவைகள் எங்கிருந்து வந்தன என்பது அவரிற்கு தெரியாது, அது பற்றி சிந்திக்கும் நிலையிலும் அவர் இல்லை.

அந்த துப்பாக்கிரவை சிறுமியின் முள்ளந்தண்டை தாக்கியுள்ளது, அவள் நடமாடமுடியாதபடி மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளாள்,

சிறுமியின் தாயரின் கவலைகள் அரசியலுடன் தொடர்பற்றவை, தனது மகளை எப்படி பராமரிக்கப்போகின்றேன் என அவர் கவலையடைந்துள்ளார்.

அவரிற்கு ஏற்கனவே ஐந்து பெண்பிள்ளைகளும் இரண்டு ஆண்பிள்ளைகளும் உள்ளனர் அதில் ஓருவர் மாற்றுத்திறனாளி- கணவர் கால்நடைகள் மேய்ப்பவர்.

ரவ்டாவின் தாய் வீட்டிற்கு வெளியே உணவு உண்டுகொண்டிருந்த வேளை இவ்வாறான ஓரு பயங்கரத்தை எதிர்கொள்ளப்போகின்றோம் என தாங்கள் நினைக்கவில்லை என்கிறார்,மிகவும் உற்சாகமும் துடிப்பும் நிறைந்த தனது மகள் தந்தையுடன் உரையாடிக்கொண்டிருந்தவேளையே அந்த சம்பவம் இடம்பெற்றது என்கிறார்.

நாங்கள் உணவருந்தியபின்னர் உரையாடிக்கொண்டிருந்தோம், மகள் தந்தையுடன் உரையாடிக்கொண்டிருந்தால், நாங்கள் அவள் கல்வீச்சினால் பாதிக்கப்பட்டுவிட்டால் என்றே நினைத்தோம், தன்னை உள்ளே தூக்கிச்செல்வுமாறு அவள் அலறினாள்,நாங்கள் மகளை உள்ளே கொண்டு சென்று டோர்ச்லைட்டை பயன்படுத்தி பார்த்தபோது முதுகில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது என அவர் குறிப்பிட்டார்.

சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தினால் தங்கள் தலைவிதி முற்றாக மாற்றியமைக்கப்பட்ட பல குழந்தைகளில் இருவரே நான் மேலே குறிப்பிட்டவர்கள்.