செய்திகள்

யுத்தம் குறித்து தெளிவான படம் ஒன்றை நான் எழுதப்போகும் நூல் வெளிக்கொணரும்: பொன்சேகா

யுத்தம் தொடர்பிலான தெளிவான படமொன்றை தான் எழுதப் போகும் புதிய நூல் வெளிக்கொணரும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தாம் விரைவில் நூல் ஒன்றை வெளியிட உள்ளதாகவும் இதில் யுத்தம் பற்றிய முழு விபரங்களையும் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்த மேலும் இராணுவ அதிகாரிகளும் நூல் வெளியிடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இராணுவத் தளபதி என்ற ரீதியில் யுத்தம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பதனை தெளிவாக தம்மால் விபரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-06