செய்திகள்

யுத்த காலத்தில் வடக்கிலிருந்து மீட்கப்பட்ட தங்கம் எங்கே? : தேடிப்பார்ப்போம் என்கிறார் பிரதமர்

கடந்த ஆட்சிக்காலத்தில் வடபகுதியிலிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட தங்கங்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக ஆராயவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்திச் செல்லப்பட்ட வங்கிகளில் மக்களால் அடகு வைக்கப்பட்டிருந்த மற்றும் பாதுகாக்கப்பட்ட தங்க நகைகள் யுத்தக்காலத்தில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருந்தது. இவ்வாறாக 150 கிலோ கிராமுக்கும் அதிக தங்கம் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. இவற்றில் 30 கிலோ கிராம் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 80 கிலோ கிராம் இராணுவத்தினரிடம் இருந்தது. என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அனுரகுமார எம்.பி அப்படியென்றால் இதில் மிகுதி 40 கிலோவுக்கு என்ன நடந்தது என கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்துள்ள பிரதமர் , அதற்கு என்ன நடந்ததென தெரியவில்லை. அது தொடர்பாக ஆராயவேண்டியுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.

 n10