செய்திகள்

யேமனிலிருந்து 40 இலங்கையர் சீன கப்பல் மூலம் ஜிபூட்டிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

யேமனிலிருந்து 40 இலங்கையர்கள் சீன கப்பலொன்றின் மூலம் ஜிபூட்டி   என்ற நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து அவர்களை விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டுள்ளதாவும் பதில் வெளி விவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, யேமனில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்கள் அனைவரும்   தலைநகர் சானாவில் இருந்து 200 கிலோமீற்றர் தூரம் தொலைவிலுள்ள துறைமுக நகரமான    ஹொதெய்தாவுக்கு பஸ் மூலம் கொண்டு சென்று அங்கிருந்து சீன கப்பல் மூலம் ஜிபூட்டி என்ற நாட்டுக்கு அழைத்துச் செல்ல  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை ஏற்றிக் கொண்டு சீன கப்பல் ஜிபூட்டி நோக்கி புறப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை; யேமனிலிருந்து சீன விமானம் மூலம் இவர்களை அழைத்து வர முயற்சித்த போதும்      அங்கு தொடர்ந்த மோதல் நிலைமை காரணமாக விமானத்தை           தரையிறக்குவதில் காணப்பட்ட       சிக்கல்     நிலைமையால்     அந்த முயற்சி கைவிடப்பட்டு    கப்பல் மூலம் இவர்களை வெளியில் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.