செய்திகள்

யோசித்தவுக்கு ஆதரவளித்த நான்கு வீரர்கள் நீக்கம்

இலங்கை கடற்படை றக்பி அணியில் இருந்து நான்கு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் நேற்று ஹோமாகம – தியகமவிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெற்ற றக்பி போட்டியின் போது, யோசித்த ராஜபக்ஷவை நினைவுபடுத்தும் வகையில் பட்டியை கைகளில் அணிந்திருந்தமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், நேற்று வீரர்கள் அணிந்திருந்த பட்டியில் யோ என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாக தெரியவந்துள்ளது.

இவர்களை றக்பி அணியில் இருந்து நீக்கி ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கடற்படைத் தளபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி குறிப்பிட்டுள்ளார்.

n10