செய்திகள்

யோஷிதவுக்கு பிணை கோரி மேல் நீதிமன்றத்தில் மனு

யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு பிணை வழங்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில்  மனுவொன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவ் ஐவருக்கும் பிணை வழங்க கடுவெல நீதவான் மறுப்பு தெரிவித்த நிலையிலேயே, மேல் நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாரிய  நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

n10