செய்திகள்

யோஷித்த சிறைக்குள் கையடக்க தொலைபேசி பயன்படுத்தவில்லை : விசாரணை அறிக்கை கூறுகிறது

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ சிறைச்சாலைக்குள் கையடக்க தொலைபேசி பாவிக்கவில்லையென அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகள் அதிகாரிகளினால் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை சிறைச்சாலைகள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விளக்க மறியலிலுள்ள யோஷித்த இரகசியமான முறையில் கையடக்க தொலைப்பேசியொன்றை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் அமைச்சரினால் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

R-06